Recent Post

6/recent/ticker-posts

மத்திய பட்டு வாரியத்தின் சில்க்டெக் 2025 சர்வதேச மாநாடு / Central Silk Board's SilkTech 2025 International Conference

மத்திய பட்டு வாரியத்தின் சில்க்டெக் 2025 சர்வதேச மாநாடு / Central Silk Board's SilkTech 2025 International Conference

ஜவுளி இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா, மத்திய பட்டு வாரியம் ஏற்பாடு செய்துள்ள சில்க்டெக்-2025 சர்வதேச மாநாட்டை புதுதில்லியில் தொடங்கி வைத்தார். 

சில்க்டெக் 2025 என்ற இந்த மாநாடு பாரத் டெக்ஸ் ஜவுளி கண்காட்சி நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்று வருகிறது. ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் திருமதி நீலம் ஷமி ராவ், முன்னிலையில் இன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு தொடங்கியது.

மத்திய பட்டு வாரியத்தின் கீழ் ராஞ்சியில் செயல்படும் ஆராய்ச்சி நிறுவனம் பட்டுத் துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் இந்த சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியது.

பட்டுத் துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த இரண்டு நூல்களை இந்த மாநாட்டின் போது, ஜவுளி இணை அமைச்சர் வெளியிட்டார்.

மாநாட்டின் போது, மத்திய பட்டு வாரியத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்திற்கும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel