2025ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் மொத்தமாக ரூ.1.96 லட்சம் கோடியாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2024ம் ஆண்டு ஜனவரியில் ஜிஎஸ்டி மொத்த வசூல் ரூ.1.74 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் 12.3% அதிகரித்துள்ளது.
2024-25ம் ஆண்டில் (ஏப்ரல் முதல் ஜனவரி வரை) இதுவரை மொத்த ஜிஎஸ்டி வசூல் 9.4 சதவீதம் அதிகரித்து ரூ.18.29 லட்சம் கோடியாக உள்ளது. இது 2023-24ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.16.71 லட்சம் கோடியாக இருந்தது.
2023-24 நிதியாண்டில் மொத்த மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.20.18 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.இது முந்தைய நிதியாண்டை விட 11.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024ம் ஆண்டு ஏப்ரலில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.2.10 லட்சம் கோடியாக உயர்ந்து சாதனை படைத்திருந்தது.
0 Comments