ஏஐ தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பான முறையில் உலகின் நன்மைக்காகப் பயன்படுத்து குறித்து விவாதிப்பதற்கான சர்வதேச உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் இன்று (பிப்.11) தொடங்கியது.
இம்மாநாட்டின் இணை தலைமையாக இந்தியா உள்ள நிலையில் பிரதமர் மோடி, இதில் கலந்துகொண்டார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சீன துணை பிரதமர் ஜாங் குவோகிங் உள்ளிட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளர்.
சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை ஜாம்பவான்களும் இக்கூட்டத்தில் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்க உள்ளனர்.
இந்த உச்சி மாநாட்டில் இணைத் தலைவர் என்ற முறையில் பேசிய பிரதமர் மோடி, "AI ஏற்கெனவே நமது வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகத்தை மறுவடிவமைத்து வருகிறது.
இந்த நூற்றாண்டில் மனிதநேயத்திற்கான 'கோட்'-ஐ AI எழுதி வருகிறது. ஆனால், அது வரலாற்றில் மற்ற தொழில்நுட்ப மைல்கற்களிலிருந்து மிகவும் வித்தியாசமானது. AI முன்னோடியில்லாத அளவில் வளர்ந்து வருகிறது.
0 Comments