Recent Post

6/recent/ticker-posts

இஸ்ரோ விஞ்ஞானி வீர மூத்துவேல் உள்பட 4 பேரை தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமித்து அரசாணை / Government orders appointment of 4 people including ISRO scientist Veera Vuthuvel as members of Tamil Nadu Higher Education Council

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கல்வி மேம்பாட்டுக்காக புதியத் திட்டங்களை வகுப்பது, பேராசிரியர்களுக்கு நவீன தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை அளிப்பது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவது, புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்குவது உள்ளிட்ட முக்கியப் பணிகளை மேற்கொள்ள உயர் கல்வி மன்றம் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானி வீர மூத்துவேல் உள்பட 4 பேரை தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், பன்னீர்செல்வம், தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர், வீரமுத்துவேல், இஸ்ரோ விஞ்ஞானி, முரளிதரன், தனியார் தொழில்நுட்ப நிறுவன CEO மற்றும் சந்திரசேகர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel