Recent Post

6/recent/ticker-posts

வெம்பகோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு / Circular flakes discovered in third phase of Vembakottai excavation

 வெம்பகோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு / Circular flakes discovered in third phase of Vembakottai excavation

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன்.18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

அகழாய்வில் இதுவரை சூது பவளம், சுடுமண் முத்திரை, தங்க நாணயம், செப்பு காசுகள், சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3300-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் ஒரே நேரத்தில் 13 வட்டச்சில்லுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த காலங்களில் வட்ட சில்லுகளை பாண்டி விளையாடப் பயன்படுத்தி உள்ளதும், இதன்மூலம் முன்னோர்கள் பொழுது போக்கிற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளதும், தெரியவருவதாகத் தகவல் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel