பீகார், ஹரியானா, சிக்கிமில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் பதினைந்தாவது நிதிக்குழு மானியத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
பீகார் மாநிலத்திற்கு 2-வது தவணையாக ரூ.821.8021 கோடியையும், நிபந்தனையற்ற மானியங்களின் முதல் தவணையில் நிலுவையாக இருந்த ரூ.47.9339 கோடியும் அளிக்கட்டுள்ளது. இந்த மானியத் தொகைக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள 38 மாவட்ட ஊராட்சிகள், 530 தகுதியான வட்டார ஊராட்சிகள் மற்றும் 8052 தகுதியான கிராம பஞ்சாயத்துகளுக்கு இந்நிதி வழங்கப்படவுள்ளது.
ஹரியானாவில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகள் 2-வது தவணையாக ரூ.202.4663 கோடி மதிப்பிலான நிபந்தனையற்ற மானியத் தொகையையும், நிபந்தனையற்ற மானியத் தொகையின் முதல் தவணையில் நிலுவையாக உள்ள ரூ.7.5993 கோடியும் பெறும் . இந்த மானியம் 18 மாவட்ட ஊராட்சிகள், 142 தகுதியான வட்டார ஊராட்சிகள் மற்றும் 6195 தகுதியான கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படும்.
சிக்கிம் மாநிலத்திற்கு 2024-25-ம் நிதியாண்டில் ரூ.6.2613 கோடி மதிப்புள்ள இரண்டாவது தவணையாக நிபந்தனையற்ற மானியத்தைப் பெறுகிறது
0 Comments