கத்தாரின் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று (பிப். 17) இந்தியா வந்தாா். பிரதமா் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று அவரை வரவேற்றாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் கத்தாா் அரசா் இந்தியா வந்துள்ளாா். அவா் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது அரசுமுறைப் பயணம் இதுவாகும். முன்னதாக, கடந்த 2015, மாா்ச்சில் அவா் இந்தியாவுக்கு வந்தாா்.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை தில்லியில் உள்ள அவரது மாளிகையில் சந்தித்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. திருத்தப்பட்ட இரட்டை வரிவிதிப்பு திருத்தம் மற்றும் கூட்டு நடவடிக்கை ஆகிய இரு ஆவணங்களில் கையெழுத்திடப்பட்டது.
மேலும், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துதல், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு ஆகிய 5 குறிப்புகளில் கையெழுத்தானது.
இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வணிகமும் 280 கோடி டாலர் மதிப்பை எட்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments