கடந்த நிதியாண்டின் (2024 - 25) இரண்டாவது காலாண்டில் 5.6 சதவிகிதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, மூன்றாவது காலாண்டில் 6.2 சதவிகிதமாக அதிகரித்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இருப்பினும், அதற்கு முந்தைய காலாண்டில் (2023 -24) இதே காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நிகழ் நிதியாண்டில் 6.4 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் தரவுகளின்படி, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நிகர அந்நிய முதலீடு சுமார் 1.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. ஆனால், அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 7.8 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments