இந்தியாவின் தலைநகர் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற நிலையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 1993ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்ததது.
இந்த சமயத்தில் சாகிப் சிங் வர்மா, மதன் லால் குரானா, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முதல்வர்களாக பதவி வகித்தனர். அதன்பிறகு, 27 ஆண்டுகளுக்கு பிறகு நடந்து முடிந்த தேர்தலில் 70 தொகுதிகளில் 44 தொகுதியில் பாஜக வெற்றிபெற்று டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.
2007 மற்றும் 2012ல் டெல்லியில் கவுன்சிலர் பதவி, முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் அதிலும் வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வான ரேகா குப்தா டெல்லியின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். டெல்லியின் 9வது முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவருடைய பதவியேற்பு விழா நடைபெற்றது.
டெல்லி முதல்வராக தேர்வாகியுள்ள ரேகா குப்தா இன்று பிப்ரவரி 20, 2025) டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பாஜக ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments