புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சோல் (த ஸ்கூல் ஆஃப் அல்டிமேட் லீடர்ஷிப்) முதலாவது தலைமைத்துவ மாநாட்டை தொடங்கிவைத்து உரையயாற்றினார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள புகழ்பெற்ற தலைவர்களையும், எதிர்கால இளம் தலைவர்களையும் வரவேற்ற திரு மோடி, இந்த மாநாடு நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் நெருக்கமான நிகழ்வு என்று குறிப்பிட்டார்.
பிப்ரவரி 21-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த இரண்டு நாள் தலைமைத்துவ மாநாட்டில், அரசியல், விளையாட்டு, கலை, ஊடகம், ஆன்மீகம், பொதுக்கொள்கை, வர்த்தகம், சமூக நலன் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தலைமைத்துவப் பண்பு தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதிக்கவும் செய்வார்கள்.
இந்த மாநாடு ஒத்துழைப்பு, சிந்தனை ஆகிய இரண்டு அம்சங்களுடன் தலைமைத்துவப் பண்பிற்கான சூழல் அமைப்பை வளர்ப்பதற்கும், வெற்றி, தோல்வி ஆகிய இரண்டிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியதன் அம்சங்களை இளம் பார்வையாளர்களுக்கு ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
0 Comments