முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பட்டா மாற்றமல் உள்ள நிலங்களுக்கு பட்டா மாறுதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் 29,000 பேருக்கு பட்டா வழங்க அமைச்சரை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்முலம் 86 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர். 4 ஆண்டுகளில், 10.25 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. நீர்நிலை புறம்போக்கு இடங்களுக்கு பட்டா வழங்க முடியாது.
நில உரிமையாளர்களுக்கு 6 மாதத்திற்குள் புதிய பட்டா மாற்றி வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ராமசந்திரன் பேட்டி அளித்துள்ளார். 6 மாத காலத்தில் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது
0 Comments