பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் மேகாலயாவின் (ஷில்லாங்கிற்கு அருகில்) மாவ்லிங்குங் முதல் அசாமின் (சில்சார் அருகே) பஞ்ச்கிராம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண். 06-ல் 166.80 கி.மீ நீளமுள்ள 4 வழி பசுமைவழி அணுகல் பாதையை அரசு-தனியார் பங்களிப்பு முறையில் அதிவேக வழித்தடமாக மேம்படுத்துதல், பராமரித்தல் மற்றும் நிர்வாகம் செய்வதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மொத்த மூலதனச் செலவு ரூ.22,864 கோடி ஆகும். 166.80 கி.மீ. திட்ட நீளப்பாதையில் மேகாலயாவில் 144.80 கி.மீ. மற்றும் அசாமில் 22.00 கி.மீ. உள்ளது.
0 Comments