Recent Post

6/recent/ticker-posts

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் நியமனம் / P.R. Kawaii appointed as the 52nd Chief Justice of the Supreme Court

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் நியமனம் / P.R. Kawaii appointed as the 52nd Chief Justice of the Supreme Court

இப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13-ஆம் தேதி ஓய்வு பெறுகிறாா். கடந்த 16-ஆம் தேதி உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாயை நியமிக்க மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்தாா்.

பி.ஆா். கவாய் வரும் டிசம்பா் 23-ஆம் தேதி பணி ஓய்வு பெறும் வரை இப்பதவியை வகிப்பாா். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த கவாய், கடந்த 1985-இல் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா்.

மும்பை உயா்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் கடந்த 1992-1993 காலகட்டத்தில் அரசுத் தரப்பு உதவி வழக்குரைஞராகப் பணியாற்றிய இவா், 2000-இல் அரசுத் தரப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா்.

கடந்த 2003-இல் மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2005-இல் நிரந்தர நீதிபதியாகவும் பதவியேற்றாா். 2019, மே 24-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியானாா்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel