Recent Post

6/recent/ticker-posts

தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றம் / National Security Advisory Board changes

தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றம் / National Security Advisory Board changes

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்றது.

பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழு கூட்டம் நடந்து முடிந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு செயல்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்திய உளவு அமைப்பான 'ரா'வின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் அலோக் ஜோஷி; ஆலோசனை குழு உறுப்பினர்களாக முன்னாள் விமானப்படை, தரைப்படை, கடற்படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel