Recent Post

6/recent/ticker-posts

14 புதிய தோழி விடுதிகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் / Chief Minister M.K. Stalin laid the foundation for 14 new Thozhi hostels

14 புதிய தோழி விடுதிகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் / Chief Minister M.K. Stalin laid the foundation for 14 new Thozhi hostels

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.5.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 38 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

மேலும், சென்னை - தரமணி மற்றும் சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி, சிவகங்கை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் 176.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 14 தோழி விடுதிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel