நம் நாட்டிடம் அதிக சக்திவாய்ந்த போர் விமானம் என்றால் அது ரஃபேல் போர் விமானம் தான். இதை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து நம் நாடு வாங்கி பயன்படுத்தி வருகிறது. இந்த ரஃபேல் போர் விமானம் என்பது 4.5 ம் தலைமுறையை சேர்ந்தது.
இந்த ரஃபேல் போர் விமானம் என்பது போரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் கூட தற்போது நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதல் காரணமாக விமானப்படையை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் நம் நாட்டுக்கும் உள்ளது.
இதனால் 5ம் தலைமுறை விமானம் என்பது முக்கியம். தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே 5ம் தலைமுறை விமானத்தை தயாரித்துள்ளன.
துருக்கி 5ம் தலைமுறை விமானத்தை தயாரித்து சோதனை மேற்கொண்டு வருகிறது. இதனால் நம் நாடும் 5ம் தலைமுறை விமானத்தை உருவாக்க முடிவு செய்தது.
அதன்படி 5ம் தலைமுறை விமானத்தை ஏஎம்சிஏ திட்டம் (ACMA Programme) மூலம் தயாரிக்க நம் நாடு முடிவு செய்தது. இந்த ACMA என்பதன் விரிவாக்கம் என்பது Advanced Medium Combat Aircraft என்பதாகும்.
தமிழில் கூற வேண்டும் என்றால் மேம்படுத்தப்பட்ட மீடியம் ரக போர் விமானம் என்பதாகும். இந்நிலையில் தான் 5ம் தலைமுறை விமானத்தை அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதேபோல் விமானத்துக்கான மாடலுக்கு இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கி உள்ளார். அதன்படி இந்த விமானத்தை நம் பாதுகாப்பு துறையின் டிஆர்டிஓ நிறுவனம் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து 5ம் தலைமுறை விமானங்களை தயாரிக்க உள்ளது.
இந்த திட்டத்தின்படி நம் நாட்டுக்கு 5ம் தலைமுறை விமானம் என்பது 2035ம் ஆண்டில் கிடைக்கும். இந்த 5ம் தலைமுறை போர் விமானம் என்பது ஸ்டெல்த் மல்டிரோல் போர் விமானமாகும்.
சிங்கிள் சீட், 2 இன்ஜின்களுடன் தயாரிக்கப்பட உள்ளது. ஸ்டெல்த் ரகம் என்பதால் இந்த விமானம் எதிரிகளின் ரேடாரில் சிக்காது. இதனால் இது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்.
0 Comments