சட்னா மற்றும் தாதியா விமான நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் / Prime Minister Narendra Modi inaugurated the Satna and Dadia airports

பிராந்திய போக்குவரத்துக்கான இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சட்னா விமான நிலையத்தையும் மேம்படுத்தப்பட்ட தாதியா விமான நிலையத்தையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

புந்தேல்கண்ட் மற்றும் பகேல்கண்ட் பிராந்தியங்களில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, இரு விமான நிலையங்களிலும் நடைபெற்ற நேரடி நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டது.

உடான் திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் விமானப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துவதற்கான மத்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டைக் குறிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.