Recent Post

6/recent/ticker-posts

TAMILNADU AGRICULTURE GROWTH REPORT 2025 / தமிழ்நாடு வேளாண் வளர்ச்சி குறித்த அறிக்கை 2025

TAMILNADU AGRICULTURE GROWTH REPORT 2025
தமிழ்நாடு வேளாண் வளர்ச்சி குறித்த அறிக்கை 2025

TAMILNADU AGRICULTURE GROWTH REPORT 2025 / தமிழ்நாடு வேளாண் வளர்ச்சி குறித்த அறிக்கை 2025

TAMIL

TAMILNADU AGRICULTURE GROWTH REPORT 2025 / தமிழ்நாடு வேளாண் வளர்ச்சி குறித்த அறிக்கை 2025: தமிழ்நாடு முதல்வர மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலாண்டிலேயே திராவிட மாடல் அரசு வேளாண்மைக்குத் தனி முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைச் சட்டப் பேரவையில் அளித்திடச்செய்தார்.

தொடர்ந்து 5 வேளாண் நிதிநிலை அறிக்கைகள் அளிக்கப்பட்டு மொத்தம் 1,94076 கோடி நிதி ஒதுக்கீட்டில் வேளாண் உற்பத்தி பெருக - உழவர் பெருங்குடி மக்கள் நலம்பெறப் புதிய பல திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி வருகிறார்.

முதல்வரின் முன்னெடுப்புகளால் முந்தைய ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் 2012-2013 முதல் 2020-2021 வரை சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி, 2021 முதல் 2024 வரை சராசரியாக 5.66 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்தது.

2020-2021-இல் இருந்த பாசனம் பெற்ற நிலப்பரப்பு 36.07 இலட்சம் எக்டர் என்பது, 2023- 2024-இல் 38.33 இலட்சம் எக்டர் என அதிகரித்து உணவுப்பொருள் உற்பத்தியில் சாதனைகள் நிகழ்ந்தன.

5,427 கி.மீ. நீளத்திற்கு சி,டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு 2 இலட்சத்து 10 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும் 8,540 சிறுபாசனக் குளங்கள் தூர்வாரப்பட்டு, 2,382 புதிய பண்ணைக்குட்டைகளும், 2,474 ஆழ்துளை/குழாய்க் கிணறுகளும் ஏற்படுத்தப்பட்டன.

1,652 புதிய வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இ-வாடகை சேவை மையங்கள் மூலம் 69,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ஆட்சிப் பொறுப்பேற்றபின் 27 மாவட்டங்களில் 917 ஏரிகள் ரூ1212 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டன.

சிறுசிறு விவசாயிகளும் பயன்பெற்று வேளாண் உற்பத்திகளைப் பெருக்கிட 814 சிறுபாசன ஏரிகள் ரூ75.59 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு விவசாய வளர்ச்சிக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

2018-19-இல் 8,362 மெட்ரிக் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில், திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் 2023-2024-ஆம் ஆண்டில் பால் உற்பத்தி, 10,808 மெட்ரிக் டன் என அதிகரித்துச் சாதனை படைத்துள்ளது.

இப்படி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளாண்மை, கால்நடைகள் வளர்ப்பு, மீனவர் நலன் என ஒவ்வொரு துறையையும், தாய் தன் குழந்தைகளைப் பேணி வருதல்போல் வளர்த்துள்ளதால், தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் சிறந்து ஒட்டுமொத்தமான வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலம் எனும் பாராட்டுகளையும் புகழையும் குவித்து வருகிறது. என்றும், எதிலும் தமிழ்நாடு முதலிடமே எனும் முழக்கம் எங்கும் எதிரொலிக்கிறது! இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ENGLISH

TAMILNADU AGRICULTURE GROWTH REPORT 2025: In the very first year of taking office, the Dravidian model government gave special importance to agriculture and for the first time in the history of the Tamil Nadu government, a separate budget report was presented to the Legislative Assembly for the agriculture sector.

5 consecutive agricultural budget reports were presented with a total allocation of Rs. 1,94076 crore to increase agricultural production and benefit the farmers.He is introducing and implementing many new schemes for the welfare of the farming community.

Due to the initiatives of the Chief Minister, agricultural growth, which averaged 1.36 percent in the previous 10 years from 2012-2013 to 2020-2021, increased to an average of 5.66 percent from 2021 to 2024, setting a record.

The irrigated area in 2020-2021 was 36.07 lakh hectares, which increased to 38.33 lakh hectares in 2023-2024, achieving achievements in food production.5,427 km. C, D section canals have been dewatered, benefiting 210,000 farmers. 

In addition, 8,540 small irrigation ponds have been dewatered, 2,382 new farm ponds and 2,474 boreholes/tube wells have been constructed. 1,652 new agricultural machinery has been purchased, benefiting 69,000 farmers through e-rental service centers.

917 lakes in 27 districts have been renovated at an estimated cost of Rs. 1212 crore since assuming office. 814 small irrigation lakes have been renovated at a cost of Rs. 75.59 crore to increase agricultural production, benefiting small farmers.

While 8,362 metric tons of milk were produced in 2018-19, milk production has increased to a record 10,808 metric tons in 2023-2024 due to the plans of the Dravidian model government. Thus, Tamil Nadu Chief Minister M.K. Stalin has developed every sector like agriculture, animal husbandry, and fishermen's welfare, as a mother nurtures her children, and Tamil Nadu has excelled in all sectors and is garnering praise and fame as the best state in India in overall development. The slogan that Tamil Nadu is number one in everything is echoed everywhere! Thus it is mentioned.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel