நாட்டில் தொழிற்கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஒரு முக்கிய படியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தொழில் பயிற்சி நிறுவனங்களின் (ஐடிஐ) மேம்பாடு மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஐந்து தேசிய திறன் மேம்பாட்டு மையங்களை அமைத்தல் ஆகியவற்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
2024-25-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, மத்திய அரசு நிதியுதவியுடன் தேசிய தொழில் பயிற்சி நிறுவனங்களின் (ஐடிஐ) மேம்பாடு, ஐந்து தேசிய திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு மையங்களை அமைத்தல் ஆகியவை செயல்படுத்தப்படும்.
2024-25 ஆம் ஆண்டு பட்ஜெட் மற்றும் 2025-26-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, ரூ.60,000 கோடி இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு பங்களிப்பு: ரூ.30,000 கோடி, மாநில அரசின் பங்களிப்பு: ரூ.20,000 கோடி மற்றும் தொழில்துறை பங்களிப்பு: ரூ.10,000 கோடி ஆகும்.
இந்தத் திட்டம் 1,000 அரசு ஐடிஐ-களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும். மாநில அரசுகள் மற்றும் தொழில்துறையுடன் இணைந்து, தற்போதுள்ள ஐடிஐக்களை அரசுக்குச் சொந்தமான, தொழில்துறையால் நிர்வகிக்கப்படும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களாக நிலைநிறுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஐந்தாண்டு காலத்தில், 20 லட்சம் இளைஞர்கள் திறன் மேம்பாடு பெறுவார்கள்.
0 Comments