11-வது சர்வதேச யோகா தினத்தை (IDY) முன்னிட்டு, விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய கொண்டாட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். விசாகப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற பொது யோகா நெறிமுறை அமர்வில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேருடன் அவர் பங்கேற்றார்.
அதே நேரத்தில் ஒரு இணக்கமான யோகா நிகழ்வின் மூலம் தேசத்தை வழிநடத்தினார். இந்தியா முழுவதும் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் யோகா நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "ஒரே பூமி - ஒரே ஆரோக்கியத்திற்கு யோகா" என்பதாகும். மனித, பூமி ஆரோக்கியம் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
அனைவரும் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்ற இந்திய தத்துவத்தில் வேரூன்றிய கூட்டு நல்வாழ்வின் உலகளாவிய பார்வையை இது எதிரொலிக்கிறது.
2015-ம் ஆண்டு ஐநா பொதுச் சபை யோகா தினத்தை ஏற்றுக்கொண்டதிலிருந்து, பிரதமர் புது தில்லி, சண்டிகர், லக்னோ, மைசூர், நியூயார்க் (ஐநா தலைமையகம்), ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கொண்டாட்டங்களை வழிநடத்தியுள்ளார். சர்வதேச யோகா தினம் ஒரு சக்திவாய்ந்த உலகளாவிய சுகாதார இயக்கமாக உருவெடுத்துள்ளது.
0 Comments