தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ராணுவத்தின் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, அவசரகாலக் கொள்முதல் தொடர்பான நெறிமுறைகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சகம் பதின்மூன்று ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது.
ஒட்டுமொத்தமான ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் ரூ. 1,981.90 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தங்கள், இறுதி செய்யப்பட்டுள்ளன. அவசரகால கொள்முதல் ஆணையின் கீழ் கொள்முதல் நடைமுறைகள் விரைவுப்படுத்தப்படும்.
தீவிரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் பாதுகாப்பு படையினரின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதை இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இவை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்யப்படும்.
0 Comments