ஜூன் 30 அன்று வெளியான மத்திய அரசு தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, அதற்கும் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 9.4 சதவீதம் அதிகமாகும். இதன்மூலம் கடந்த ஐந்தே ஆண்டுகளில் ஜிஎஸ்டி வசூல் இரட்டிப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், 2021-ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 11.37 லட்சம் கோடியாக இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடும் போது கடந்த நிதியாண்டில் இரட்டிப்பாகியுள்ளது.
2024-25 நிதியாண்டில் மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.84 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டின் மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.68 லட்சம் கோடியாகவும், 2022-ஆம் நிதியாண்டில் ரூ. 1.51 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரிதாரர்கள் எண்ணிக்கையும் கடந்த 2017-இல் 65 லட்சம் என்ற அளவிலிருந்து 1.51 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி கடந்த 8 ஆண்டு காலத்துக்குள் நிகழ்ந்துள்ளது.
0 Comments