பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்த ஆர்சிபி இன்று இறுதிப் போட்டியில் அதே பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி மட்டுமே 43 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
191 ரன்களை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் - க்ருணால் பாண்ட்யா - 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்
எமர்ஜிங் பிளேயர் ஆஃப் தி சீசன் - தொடர் முழுவதும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட சாய் சுதர்சன் தேர்வு - ரூ.20 லட்சம்
ஃபேர் பிளே அவார்ட் - களத்தில் ஒழுக்கத்துடன் செயல்பட்ட அணிக்கு வழங்கப்படும் ஃபேர் பிளே விருது சென்னை அணிக்கு கிடைத்தது
ஆரஞ்சு தொப்பி - நடப்பு தொடரில் 759 ரன்களை விளாசி சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பியை தனதாக்கினார் - ரூ.10 லட்சம்
ஊதா தொப்பி - நடப்பு தொடரில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரஷித் கிருஷ்ணா ஊதா தொப்பியை வசப்படுத்தினார் - ரூ.10 லட்சம்
விலை மதிப்புமிக்க வீரர் - நடப்பு தொடரில் விளையாடிய 16 போட்டிகளில் குறைந்தபட்சம் 25+ ரன்களை சேர்த்து 717 ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவ் மிகவும் மதிப்புமிக்க வீரராக தேர்வானார் - ரூ.10 லட்சம்
0 Comments