Recent Post

6/recent/ticker-posts

ஏப்ரல் 2025-ல் இபிஎஃப்ஓ 19.14 லட்சம் உறுப்பினர் சேர்ப்பு / EPFO adds 19.14 lakh members in April 2025

ஏப்ரல் 2025-ல் இபிஎஃப்ஓ 19.14 லட்சம் உறுப்பினர் சேர்ப்பு / EPFO adds 19.14 lakh members in April 2025

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) ஏப்ரல் 2025-க்கான தற்காலிக சம்பளப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி மொத்தம் 19.14 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மார்ச் 2025-ஐ விட 31.31% அதிகமாகும்.

ஆண்டு பகுப்பாய்வின்படி, ஏப்ரல் 2024 உடன் ஒப்பிடும்போது நிகர சேர்க்கை 1.17% அதிகரித்துள்ளது. இது இபிஎஃப்ஓ-வின் பயனுள்ள மக்கள் தொடர்பு முயற்சிகளாலும், அதிகரித்த வேலைவாய்ப்புகளாலும் ஏற்பட்டுள்ளது.

18 முதல் 25 வயதுப் பிரிவில் 4.89 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது ஏப்ரல் 2025-ல் சேர்க்கப்பட்ட மொத்த புதிய சந்தாதாரர்களில் 57.67% ஆகும். 18-25 வயதுப் பிரிவில் புதிய சந்தாதாரர்கள் மார்ச் 2025 உடன் ஒப்பிடும்போது 10.05% அதிகமாகும்.

முன்னர் வெளியேறிய சுமார் 15.77 லட்சம் உறுப்பினர்கள் ஏப்ரல் 2025-ல் இபிஎஃப்ஓ-வில் மீண்டும் இணைந்தனர். இந்த எண்ணிக்கை மார்ச் 2025 ஐ விட 19.19% அதிகமாகும்.

ஏப்ரல் 2025 இல் சுமார் 2.45 லட்சம் புதிய பெண் சந்தாதாரர்கள் இணைந்தனர். இது மார்ச் 2025 உடன் ஒப்பிடும்போது 17.63% அதிகரிப்பை எடுத்துக் காட்டுகிறது.

2025 ஏப்ரல் மாதத்தில் நிகர பெண்கள் சேர்க்கை சுமார் 3.95 லட்சமாக இருந்தது. மார்ச் 2025 உடன் ஒப்பிடும்போது இது 35.24% அதிகமாகும். ஏப்ரலில் மகாராஷ்டிரா 21.12% பங்களிப்புடன் முன்னணியில் உள்ளது. 

கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், ஹரியானா, தில்லி, உத்தரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களும் அதிக எண்ணிக்கையில் இபிஎஃப்ஓ சேர்க்கையில் பங்களித்துள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel