அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 212 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 66, வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்தார்கள்.
தென்னாபிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை மிகச்சிறப்பாக பௌலிங் செய்த ஆஸ்திரேலியா வெறும் 138 ரன்களுக்கு சுருட்டி வீசி 74 ரன்கள் முன்னிலை பெற்றது.
அதிகபட்சமாக டேவிட் பேடிங்கம் 45, கேப்டன் பவுமா 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை மிகச்சிறப்பாக பௌலிங் செய்த தென் ஆப்பிரிக்கா 207 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 58*, அலெக்ஸ் கேரி 43 ரன்கள் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 4, லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இறுதியில் 282 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு துவக்க வீரர் ஐடன் மார்க்ரம் ஐசிசி ஃபைனலில் சதத்தை அடித்த முதல் தென்னாபிரிக்க வீரராக சாதனை படைத்து 136 (207) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியில் கெய்ல் வேரின் 7*, பேடிங்கம் 21* ரன்கள் எடுத்ததால் 285/5 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்று தென்னாபிரிக்கா சாதனை படைத்தது. அதை விட 1998 நாக் அவுட் டிராபிக்கு பின் 27 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்கா முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
0 Comments