Recent Post

6/recent/ticker-posts

சாம்பியன்ஸ் லீக் 2025 - பிஎஸ்ஜி சாம்பியன் / UEFA Champions League - PSG Champions

சாம்பியன்ஸ் லீக் 2025 - பிஎஸ்ஜி சாம்பியன் / UEFA Champions League - PSG Champions

ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில் 36 அணிகள் மோதி, இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி அணியும் இன்டர் மிலன் அணியும் இன்று மோதின.

இந்தப் போட்டியில் பிஎஸ்ஜியின் ஹகிமி 12ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடிக்க, 19 வயதான டூவே 20,63 ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.

தொடக்கம் முதலே பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைக்கத் தவறிய இன்டர் மிலன் அணி 40 சதவிகிதத்துடன் மிகவும் மோசமாக விளையாடியது. 60 சதவிகித பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்த பிஎஸ்ஜி அணி 87 சதவிகித துல்லியமாக பந்தினை பாஸ் செய்தது.

பிஎஸ்ஜி அணி 23 ஷாட்டுகள் அடித்ததில் இலக்கை நோக்கி 8 ஷாட்டுகள் இருந்தன. இன்டர் மிலன் அணியோ மொத்தமாக அடித்த 8 ஷாட்டுகளில் 2 மட்டுமே இலக்கை நோக்கி அடிக்கப்பட்டன.

கடைசி நேரத்தில் க்விச்சா க்வாரட்ஸ் கெலியா, சென்னி மயுலு முறையே 73, 86ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்கள். போட்டியின் முடிவில் PSG அணி இன்டர் மிலனை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel