அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண்ணின் அடிப்படையில் 2025 மே மாதத்திற்கான (2024 மே மாதத்தை விட) பணவீக்க விகிதம் 0.39% ஆக உள்ளது.
2025 மே மாதத்தில் முதன்மையான உணவுப் பொருட்கள், மின்சாரம், பிற உற்பத்தி பொருட்கள், ரசாயனப் பொருட்கள், பிற போக்குவரத்து உபகரணங்கள், உணவுப் பொருள் அல்லாத பொருட்களின் உற்பத்தி போன்றவற்றின் விலை உயர்வு, பணவீக்கத்தின் நேர்மறையான விகிதத்திற்கு காரணமாகும்.
முதன்மைப் பொருட்கள் (சிறப்பு நிலை 22.62%):- கனிமங்கள் (-7.16%) மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை (-0.63%) 2025 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 மே மாதத்தில் குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை (0.56%) 2025 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 மே மாதத்தில் அதிகரித்துள்ளது,
எரிபொருள் & மின்சக்தி ( 13.15%:- தாது எண்ணெய்களின் விலை (-2.06%) 2025 ஏப்ரல் உடன் ஒப்பிடும்போது 2025 மே மாதத்தில் குறைந்துள்ளது. நிலக்கரி (0.81%) மற்றும் மின்சக்தியின் விலை (0.80%) 2025 ஏப்ரல் உடன் ஒப்பிடும்போது 2025 மே மாதத்தில் அதிகரித்துள்ளது.
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் (சிறப்பு நிலை 64.23%):- பிற உலோகம் அல்லாத கனிமப் பொருட்களின் உற்பத்தி; கணினி, மின்னணு, கண்ணாடி இழைப் பொருட்கள்; மருந்துகள், ரசாயன மற்றும் தாவரவியல் பொருட்கள், ஜவுளி போன்றவை. மாதந்தோறும் விலை உயர்ந்தன.
உணவுப் பொருட்கள் உற்பத்தி, அடிப்படை உலோகங்கள், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயன பொருட்கள், மின் உபகரணங்கள் போன்றவை விலையில் சரிவை கண்டன.
மொத்த விலை உணவு குறியீடு (சிறப்பு நிலை 24.38%):- உணவுப் பொருள் குறியீடு ஏப்ரல் மாதத்தில் 189.3 ல் இருந்து மே மாதத்தில் 189.5 ஆக அதிகரித்துள்ளது.
மொத்த விலை உணவு குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட பணவீக்க விகிதம் 2025 ஏப்ரல் மாதத்தில் 2.55% இருந்து 2025 மே மாதத்தில் 1.72% ஆகக் குறைந்துள்ளது.
0 Comments