Recent Post

6/recent/ticker-posts

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு / Caste Census 2027 conducted in 2 Phase

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு / Caste Census 2027 conducted in 2 Phase

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 01, 00:00 மணியாக இருக்கும்.

லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரம்பு தேதி 2026 அக்டோபர் 01, 00:00 மணியாக இருக்கும்.

மேற்குறிப்பிட்ட தேதிகளுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் நோக்கம் பற்றிய அறிவிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் பிரிவு 3ன்படி, 16.06.2025 (தோராயமாக) அன்று அரசிதழில் வெளியிடப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990-ன் படி இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடைசியாக 2011-ல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.

முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியலிடுதல் (2010 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை), இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2011 பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 28 வரை), இதற்கான வரம்பு தேதி 2011 மார்ச் 01, 00:00 மணியாக இருந்தது. ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான வரம்பு தேதி 2010 அக்டோபர் 01, 00:00 மணியாக இருந்தது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-க்கான முதல்கட்ட தயாரிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், களப்பணி சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020 ஏப்ரல் 1 முதல் தொடங்கவிருந்தது.

இருப்பினும் நாடு முழுவதும் கொவிட் 19 பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel