தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 2021ல் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கரோனா தொற்று பரவல் காரணமாக நடத்த முடியாமல் போனது. தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக இன்று அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லடாக், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் மட்டும் 2026 அக்டோபா் 1 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் நாட்டின் பிற மாநிலங்களில் 2027-ஆம் ஆண்டு மாா்ச் 1 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இரண்டு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments