யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 21-வது வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று (26.06.2025) டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது.
யானைகள் அதிகம் வாழும் மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள், கள வல்லுநர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுடன், யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும், நாட்டில் யானைகளின் பாதுகாப்புக்கான வழிகள் குறித்து ஆலோசிக்கவும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
மனித பாதுகாப்புக்கும் யானைகள் பாதுகாப்பிற்கும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க சவாலாக உள்ள மனித - யானை மோதல் சம்பவங்களைத் தடுப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
0 Comments