Recent Post

6/recent/ticker-posts

மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2.8% அதிகரிப்பு மற்றும் இறக்குமதி 1% குறைவு / The country's exports increased by 2.8% and imports decreased by 1% in May

மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2.8% அதிகரிப்பு மற்றும் இறக்குமதி 1% குறைவு / The country's exports increased by 2.8% and imports decreased by 1% in May

கடந்த மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 2.8% அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதத்திற்கான நாட்டின் மொத்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி 71.12 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட 2.77% வளர்ச்சியைக் குறிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மே மாதத்துக்கான நாட்டின் மொத்த வணிகப் பொருள்கள் மற்றும் சேவைத் துறைகளுக்கான இறக்குமதி 77.75 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 1.02% சரிவாகும்.

மே மாதத்தில் நடந்த சரக்கு ஏற்றுமதி வளர்ச்சியில், வணிகப் பொருள்கள், கெமிக்கல்ஸ், மருந்துப் பொருள்கள், கடல் பொருள்கள், ரெடிமேட் ஆடைகள் ஆகியவை முக்கியமானவையாகும்.

குறிப்பாக, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு பொருள்கள் ஏற்றுமதி மதிப்பு 4.57 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 54% அதிகமாகும். கடந்த ஆண்டு மே மாதத்தில் 2.97 பில்லியன் டாலராக இது இருந்தது.

இதேபோன்று கெமிக்கல் பொருள்கள் ஏற்றுமதி 16% அதிகரித்து 2.68 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இது 2.31 பில்லியனாக இருந்தது.
மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி 7.38% அதிகரித்து 2.48 பில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 2.31 பில்லியனாக இருந்தது.

கடல் பொருள்கள் ஏற்றுமதியும் 26.79% அதிகரித்து 0.73 பில்லியனாகவும், ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி 11.35% அதிகரித்து 1.51 பில்லியன் டாலராகவும் உள்ளது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel