Recent Post

6/recent/ticker-posts

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister M.K. Stalin inaugurated a robotic parts manufacturing plant worth Rs. 300 crore

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister M.K. Stalin inaugurated a robotic parts manufacturing plant worth Rs. 300 crore

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.  

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அஜைல் ரோபோட்ஸ் SE நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, புதிய தலைமுறை தானியங்கு தீர்வுகளை வழங்கும் நிறுவனம் ஆகும். 

இந்நிறுவனம், தற்போது, அனைத்துத் துறைகளுக்கும் பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை, காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் நிறுவியுள்ளது. 

இத்திட்டத்தில், ரூ. 300 கோடி முதலீட்டில் 300 உள்ளூர் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  

SOL இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இத்தாலி நாட்டைச் சேர்ந்த SOL SpA மற்றும் இந்தியாவின் சிக்ஜில்சால் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும். 

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள இந்நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது. 

2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, ரூ.100 கோடி முதலீடு மற்றும் 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது ரூ. 200 கோடி முதலீடு என்ற வகையில், இந்நிறுவனம், தமிழ்நாடு அரசுடன் காற்று பிரித்தெடுக்கும் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.  

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel