உத்தரப் பிரதேசத்தின் கௌதம புத்தா நகரில் ரூ.417 கோடி மதிப்பில் மின்னணு உற்பத்தி தொகுப்பு (EMC 2.0) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது உள்ளூர் உற்பத்தி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உண்டு. இதை அங்கீகரித்து, திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட மின்னணு உற்பத்தி தொகுப்பு 2.0 திட்டம் யமுனா விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தால் உருவாக்கப்படும். இந்த தொகுப்பு 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, ரூ.2,500 கோடி முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments