பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகளைத் தகர்க்கும் முயற்சியையும் துணிச்சலுடன் எதிர்த்த எண்ணற்ற நபர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
1974-ம் ஆண்டு நவநிர்மாண் இயக்கம், சம்பூர்ண கிராந்தி இயக்கம் ஆகியவற்றுக்கும் தடை விதிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, பின்னர் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் பல இன்னல்களை சந்தித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவசரநிலை பிகரடனத்தின் அத்துமீறல்களுக்கு எதிரான அவர்களது துணிச்சலுக்கும் எதிர்ப்புக்கும் மத்திய அமைச்சரவை அஞ்சலி செலுத்தியது.
2025-ம் ஆண்டு, இந்திய வரலாற்றில் அரசியலமைப்புச் சட்டம் சீர்குலைக்கப்பட்டு, குடியரசு மற்றும் ஜனநாயக உணர்வு சிதைக்கப்பட்டும், கூட்டாட்சித் தத்துவம் சீர்குலைக்கப்பட்டதற்கும், அடிப்படை உரிமைகள், மனித சுதந்திரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்ட மறக்க முடியாத அத்தியாயமாகும். இது அரசியலமைப்பு படுகொலை தினத்தின் 50 ஆண்டுகளைக் குறிப்பதாக உள்ளது.
மக்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளின் நெகிழ்வுத் தன்மை மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சரவை மீண்டும் தெரிவித்துள்ளது.
0 Comments