நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்கள் அளித்து வருகிறது. அந்த கடன்களுக்கு பிற வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு வட்டி செலுத்துகின்றன.
வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு அளிக்கும் வட்டி விகிதம் ரெப்போ என்று அழைக்கப்படும். இந்த ரெப்போ வட்டி விகிதத்தை நாட்டின் பொருளாதார நிலையை பொறுத்து ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றியமைப்பது வழக்கம்.
அதாவது சில்லறை பணவீக்கத்தை பொறுத்துதான் மாற்றியமைக்கும். இந்நிலையில் இன்று பொருளதாரக் கொள்கை தொடர்பாக ரிசர்வ் வங்கி கூட்டம் இன்று நடந்தது. ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டியை 6 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக குறைந்துள்ளார்.
வழக்கமாக 0.25 சதவீதம் குறைக்கப்படும் நிலையில், இம்முறை 0.50 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பிப்ரவரி தொடங்கி ஜூன் மாதத்திற்குள் ஒரு சதவதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைந்துள்ளது.
0 Comments