Recent Post

6/recent/ticker-posts

ஜி7 மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் உரை / Prime Minister's speech at the G7 Public Relations Session

ஜி7 மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் உரை / Prime Minister's speech at the G7 Public Relations Session

கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் வெளிநடவடிக்கை அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். 'மாறிவரும் உலகில் எரிசக்தி பாதுகாப்பு: பன்முகத்தன்மை, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு' என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்த அவர், ஜி7-ன் 50 ஆண்டு பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் தமது உரையில், எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் எரிசக்தி பாதுகாப்பும் ஒன்று என்பதை எடுத்துரைத்தார். 

உள்ளடக்கிய வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை விரிவாகக் கூறிய அவர், கிடைக்கும் தன்மை, எளிதில் அணுகல், மலிவு விலை ஆகியவை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு அணுகுமுறை தொடர்பான கொள்கைகள் என்று குறிப்பிட்டார். 

இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், அது பாரிஸ் உறுதிமொழிகளை முன்கூட்டியே வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். 

நிலையான, பசுமையான எதிர்காலத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த அவர், சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம், ஒரே சூரியன் - ஒரே உலகம் – ஒரே மின் கட்டமைப்பு போன்ற பல உலகளாவிய முன்முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel