குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் சரியாக இன்று பிற்பகல் 1.38 மணிக்கு ஓடுதளத்தில் இருந்து புறப்படும் விமானம் சில விநாடிகளில் பறக்கத் தொடங்குகிறது.
அடுத்த 20 விநாடிகளில் மேலே பறக்க முடியாமல் தள்ளாடியபடி தரையை நோக்கி வரும் விமானம், மருத்துவக் கல்லூரியின் கட்டடத்தில் மோதி வெடித்துச் சிதறுகிறது.
இதன்மூலம் விமானம் பறக்கத் தொடங்கியவுடன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானி கட்டுப்பாட்டு அறைக்கு ’மே டே’ அறிவித்திருப்பது தெரியவருகின்றது.
இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 242 பேர் பயணித்த நிலையில், இதுவரை 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 Comments