வக்பு சொத்துகளை பதிவு செய்யவும், சரிபார்க்கவும், கண்காணிக்கவுமான பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் உமீத் (UMEED) என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இதனை தொடங்கிவைத்தார்.
மாநிலங்கள், மத்திய சிறுபான்மை அமைச்சகத்துடன் பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் 8.7 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் வக்பு சொத்துகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 4.2 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் முறையான ஆவணங்கள் இன்றி வக்பு சொத்துகளாக நீண்டாக காலமாக இருந்துவருகின்றன.
0 Comments