Recent Post

6/recent/ticker-posts

சென்னை மாநகரில் கட்டணமில்லா குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Chief Minister M.K. Stalin inaugurated free drinking water ATM machines in Chennai city

சென்னை மாநகரில் கட்டணமில்லா குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Chief Minister M.K. Stalin inaugurated free drinking water ATM machines in Chennai city

சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் ரூ.6.04 கோடியில் நிறுவப்பட்டுள்ள 50 கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டுள்ளன.

சென்னை மெரீனா கடற்கரையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டுள்ள தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்ததுடன், அங்கிருந்தபடியே மாநகரின் பிற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களின் செயல்பாட்டையும் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, மேயர் ப்ரியா, அரசு அதிகாரிகள் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel