டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 625 மின்சாரப் பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சென்னை வியாசா்பாடி பணிமனையிலிருந்து மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் பணிகள் முடிவடைந்தன.
இந்நிலையில் சென்னை வியாசர்பாடியில் இருந்து 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின், பேருந்தில் ஏறி பேருந்தின் சிறப்பம்சங்களைக் கேட்டறிந்தார். 7 சிசிடிவி கேமரா, சீட் பெல்ட், சார்ஜிங் பாய்ண்ட் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments