புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று இந்திய நேரப்படி 12:01-க்கு ஏவப்பட்ட 'ஆக்சியம் 4' திட்டத்தின் டிராகன் விண்கலம், தனது 28 மணி நேர பயணத்தை நிறைவு செய்து இன்று இந்திய நேரப்படி மாலை 4:01 மணியளவில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து 424 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
நாசாவின் நேரடி வீடியோ இணைப்பு, டிராகன் விண்கலமானது விண்வெளி நிலையத்தை நெருங்குவதைக் காட்டியது மற்றும் டாக்கிங் (docking) பணி மாலை 4:15 மணிக்கு நிறைவடைந்தது.
டிராகன் விண்கலம் தரையிறங்கியவுடன், இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்தார்.
0 Comments