மாநில திட்டக் குழுவானது முதலமைச்சர் தலைமையில் செயல்படும் ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவாகும். தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி மக்கள் நல திட்டங்களை மதிப்பீட்டு ஆய்வு செய்வதிலும், அரசு ஆளுகையில் எழும் புதிய தேவைகளுக்கேற்ப கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், பல்வேறு ஆய்வுகள் நடத்தி அறிக்கை தயாரிப்பதிலும் தனது பங்களிப்பை மாநில திட்டக் குழு நல்கி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (9.6.2025) தலைமைச் செயலகத்தில், துணை முதலமைச்சர் மற்றும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 1) தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள் 2) நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030-தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம் 3) தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ் (வாகன உற்பத்தி) துறையின் எதிர்காலம் 4) அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி - தமிழ்நாட்டை வடிவமைக்கும் பாதை ஆகிய நான்கு அறிக்கைகளை சமர்ப்பித்தார்.
0 Comments