மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அஞ்சல் துறைக்கு சொந்தமான இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் நிதிசார் உள்ளடக்கத்தை விரிவுபடுத்துவதில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறையால் 2024-25-ம் ஆண்டுக்கான டிஜிட்டல் பேமெண்ட்ஸ் விருது வழங்கப்படுகிறது.
2024–25-ம் நிதியாண்டிற்கான செயல்திறன் குறியீட்டில் நாட்டில் உள்ள பேமெண்ட்ஸ் வங்கிகளில் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி முதல் இடத்தைப் பிடித்து இந்த விருதைப் பெற்றுள்ளது.
இந்த வங்கியின் சிறப்பான செயல்பாடுகள் மற்றும் காகிதப் பயன்பாடற்ற டிஜிட்டல் முறையிலான சேவைகளை எளிதாகவும் பாதுகாப்பான முறையிலும் செயல்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
0 Comments