பாரிஸ் நகரில் நடைபெற்ற 2025 டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ், மீண்டும் ஜூலியன் வெபருடன் மோதினார். ஜூலியன் வெபர் தனது முதல் முயற்சியில் 87.88 மீட்டர் தூரம் எறிந்தார். ஆனால், நீரஜ் 88.16 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார்.
நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் 88.16 மீட்டர் எறிந்த பிறகு, தனது இரண்டாவது முயற்சியில் 85.10 மீட்டர் எறிந்தார். கடைசி முயற்சியில் 82.89 மீட்டர் தூரம் எறிந்தார்.
ஜூலியன் வெபர் 87.88 மீட்டர், 86.20 மீட்டர், 82.03 மீட்டர், 83.13 மீட்டர், 84.50 மீட்டர் மற்றும் 81.08 மீட்டர் என சீரான தூரங்களை எறிந்தாலும், நீரஜின் முதல் முயற்சி தூரம் அவருக்குக் கை கொடுக்கவில்லை. இதனால் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸ் டைமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா மீண்டும் பட்டம் வென்றுள்ளார். ஒட்டுமொத்தமாக, இது அவரது 5வது டைமண்ட் லீக் வெற்றியாகும்.
0 Comments