விரைவு ரோந்து கப்பல்கள் என்பவை கடலோரக் காவல் படையில் உள்ள கப்பல்களில் பிட்ச் ப்ரொப்பல்லர்கள் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கியர்பாக்ஸ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது வகை கப்பல்கள் ஆகும்.
இதன் சிறந்த சூழற்சித்திறன், செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மை ஆகியவை கடற்பகுதி கண்காணிப்புப் பணியில் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது.
இந்த கப்பலில் 30 மிமீ அளவிலான சிஆர்என்-91 ரக துப்பாக்கி, தீ கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றுடன் கூடிய இரண்டு 12.7 மிமீ நிலைப்படுத்தப்பட்ட தொலைக்கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய துப்பாக்கிகள், ஒருங்கிணைந்த பாலம் அமைப்பு, ஒருங்கிணைந்த தள மேலாண்மை அமைப்பு, தானியங்கி மின் மேலாண்மை அமைப்பு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த மேம்பட்ட அமைப்புகள், இந்தியாவின் விரிவான கடல்சார் பாதுகாப்புப் பணிகளில் அதிக செயல்திறன் மற்றும் எதிர் தாக்குதல் நடத்துவதற்கான வலிமையையும் கொண்டுள்ளன.
0 Comments