தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய கே.சுரேந்தரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.
இதை ஏற்று, அவரை இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், நீதிபதி சுரேந்தருக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நீதிபதி சுரேந்தர் பதவியேற்றதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. 16 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
0 Comments