தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் புத்தொழில் நிறுவனங்களுக்கான சூழல் அமைப்பை வலுப்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தவும் ஏதுவாக மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, தனியார் டிஜிட்டல் தளமான யுவர்ஸ்டோரி மீடியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
நாடு முழுவதும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
பாரத் திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் கருவிகள், இணையதளங்கள் மற்றும் பிராந்திய மொழிகளில் கதைசொல்லல் முயற்சிகள் வாயிலாக 10 லட்சம் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதே இதன் நோக்கமாகும்.
இத்தகைய முயற்சிகள் நாட்டில் புத்தொழில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சூழல் அமைப்பை மேம்படுத்தவும் இணையதள பக்கங்களை உருவாக்குதல், காட்சிப்படுத்துதல் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கும் உத்வேகம் அளிக்க உதவுகிறது.
செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் மேம்பாட்டிற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
0 Comments