Recent Post

6/recent/ticker-posts

ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்ற எம்.எஸ்.தோனி / MS Dhoni inducted into ICC Hall of Fame


லெஜண்டரி வீரர்களுடன் ஒருநாள் என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஐசிசி சார்பில் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ள வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் இன்று (ஜூன் 9) அறிவிக்கப்பட்டது.
ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் இன்று அறிவிக்கப்பட்ட 7 பேரில் 5 ஆடவர், 2 மகளிர் அடங்குவர். இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ள 11-வது இந்திய வீரர் என்ற பெருமை அவரைச் சேரும்.
ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் எம்.எஸ்.தோனி மட்டுமின்றி, மேத்யூ ஹைடன், டேனியல் வெட்டோரி, ஹாசிம் ஆம்லா, கிரீம் ஸ்மித், சனா மிர் மற்றும் சாரா டெய்லர் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel