செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக தடகள கான்டினென்டல் டூர் பிரிவு ஏ-வில் ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்கில் தங்கம் வென்றார். மொத்தம் 9 பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே நீரஜ் சோப்ரா ஆதிக்கம் செலுத்தினார்.
நீரஜ் சோப்ரா தனது சிறந்த நிலையான 90.23 மீட்டரை எட்டத் தவறிய போதிலும், 85.29 மீட்டருக்கு ஈட்டி எறிந்து முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தைத் தனதாக்கினார்.
தென்னாப்பிரிக்காவின் டவ் ஸ்மிட் 84.12 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இரண்டு முறை உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 83.63 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
0 Comments