3 நாடுகளுக்கான 5 நாட்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரசுக்கு பிரதமா் மோடி சென்றுள்ளார்.
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து தலைநகா் நிகோசியாவில் சைப்ரஸ் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸ் மற்றும் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், இருநாட்டு உறவின் அடையாளமாக சைப்ரஸ் நாட்டின் உயரிய 'கிராண்ட் க்ராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகாரியோஸ் III' விருதை அந்நாட்டின் அதிபர் கிறிஸ்டோடெளலிடிஸ், பிரதமர் மோடிக்கு அளித்து கெளரவித்துள்ளார்.
0 Comments